போலீஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோ

குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது.

Update: 2017-07-08 21:00 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் போலீஸ் நிலையம் வளாகத்தில் குடியாத்தம் டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து மற்றும் குற்றசம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் கார், ஆட்டோகள், 2 சக்கர வாகனங்கள் என 100–க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.

இந்த நிலையில் போலீஸ் நிலையம் வளாகம் அருகே நேற்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது குப்பைகள், செடி, கொடிகளை ஓரிடத்தில் குவித்து வைத்திருந்தனர். மாலையில் அந்த இடத்தில் திடீரென தீப்பற்றியது. பின்னர் தீ அருகில் இருந்த ஆட்டோவிற்கு பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாதவாறு தடுத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அங்கிருந்த வாகனங்கள் தப்பின.

மேலும் செய்திகள்