2020-க்குள் ‘குளோனிங்’ மனிதன்?

அறிவியல் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்திய விஷயம், ‘குளோனிங்’. உடற்சேர்க்கையில்லா இனப்பெருக்கம் என்பதுதான் ‘குளோனிங்’ முறையின் அடிப்படை. உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Update: 2017-07-08 08:59 GMT
செம்மறி ஆடு, பூனை, மான், நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை விஞ்ஞானிகள் இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள்.

மரபணு குளோனிங், இனப்பெருக்க குளோனிங், சிகிச்சைமுறை குளோனிங் ஆகிய மூன்று முறைகளில் குளோனிங் செய்யப்படுகிறது.

இனப்பெருக்கத்துக்கு குளோனிங் செய்யப்பட வேண்டிய விலங்கில் இருந்து முதிர்ந்த ‘சொமாட்டிக் செல்’ மற்றும் டி.என்.ஏ. கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் ஆகிய இரு செல்களை எடுத்து விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி விலங்குகளை வைத்துச் செய்யப்படும் ஆராய்ச்சியின் அடுத்த உச்சகட்டமாக, மனிதர்களை குளோனிங் செய்வதும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருது கிறார்கள்.

தற்போது சிகிச்சை முறை குளோனிங்கில், மரபணு நோய்கள், வயதானால் வரும் தீவிர பிரச்சினைகள் போன்றவை சரிசெய்யப்படுகின்றன.
குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் இதே முக்கியத்துவத்துடன் தொடரும் பட்சத்தில், 2020-ம் ஆண்டுக்குள் குளோனிங் மனிதனை உருவாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் உறுதியுடன் சொல்கிறார்கள்.

மனிதனை குளோனிங் முறையில் உருவாக்க முயற்சி செய்யலாமா, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற வாதப் பிரதி வாதங்கள் ஒருபக்கம் தொடர்ந்து வருகின்றன. ஆனால் குளோனிங் முயற்சிகளும் நீடித்து வருகின்றன. மரபு சார்ந்த வியாதிகள், குழந்தையின்மை போன்றவற்றை குளோனிங் முறையில் தீர்க்க முடியும் என்றால் அதை வரவேற்கலாம்தான்.

மேலும் செய்திகள்