மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-07-07 21:47 GMT
திங்கள்சந்தை,

கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் பிரவின் (வயது 23), திங்கள்சந்தை அருகே உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் பிரவின் கருங்கல் பகுதியில் இருந்து புதுக்கடை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாங்கரை பகுதியை சென்றடைந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரவின் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் தெருவுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்