பிரஜ்வல் கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம் கட்சியில் தேவேகவுடாவின் முடிவுதான் இறுதியானது ரேவண்ணா பேட்டி

பிரஜ்வல் கூறிய கருத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என்றும், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் தேவேகவுடா எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் ரேவண்ணா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-07-07 20:30 GMT

மைசூரு,

பிரஜ்வல் கூறிய கருத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என்றும், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் தேவேகவுடா எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் ரேவண்ணா எம்.எல்.ஏ. கூறினார்.

குடும்பத்துடன் சாமி தரிசனம்

கன்னட ஆடி மாத 2–வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது அம்மனுக்கு விசே‌ஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வும், தேவேகவுடாவின் மகனுமான ரேவண்ணா நேற்று சாமுண்டி மலைக்கு குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசித்து வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

தேவேகவுடா முடிவுதான் இறுதியானது

எனது மகன் பிரஜ்வல் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சூட்கேஸ் கலாசாரம் உள்ளதாக கூறிய கருத்து சர்ச்சைக்கு உரியதுதான். ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அதை யாரும் பெரிது படுத்தவும் வேண்டாம். கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா எடுக்கும் முடிவுதான் கட்சியில் இறுதியானது. அவர் சொல்கிறபடிதான் நாங்கள் நடப்போம்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. யார் மீதும் அதிருப்தி கொள்ள வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். கட்சியை வலுப்படுத்துவதற்காக எல்லோரும் உழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்