பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சாலை ஆய்வாளர்கள் தீர்மானம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
குறிஞ்சிப்பாடி,
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழிற்கல்வி சாலை ஆய்வாளர்கள் சங்க கடலூர் மாவட்ட கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதற்கு அருணகிரி தலைமை தாங்கினார். குலோத்துங்கன் முன்னிலை வகித்தார். சுஜாதா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சரவணகுமார், மாநில துணைத்தலைவர் இசக்கி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் சாலை ஆய்வாளர்கள் அருள்பிரசாத், சோலையப்பன், ஸ்ரீதர், அபர்ணா, வேல்விழி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளர் பணியிடத்திற்கு கோட்டங்கள் வாரியாக 5 ஆண்டுகள் பணிகாலத்தை நிறைவு செய்த 2–ம் நிலை சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் நிலை–1 சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வலியுறுத்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் 25 கி.மீட்டருக்கு கூடுதலாக சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் சாலை ஆய்வாளர்களுக்கு பயணப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களின் பணித்தன்மை மற்றும் குறைகள் குறித்து கோட்ட பொறியாளர் தலைமையில் 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.