பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை ‘கடல் அணில்’

பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று விட்டு, நேற்று காலை பல வகை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

Update: 2017-07-07 21:45 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து சுமார் 700–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று விட்டு, நேற்று காலை பல வகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு படகில் சென்று வந்த மீனவர்களின் வலையில் அரிய வகை ‘‘கடல் அணில்’’ மீன் ஒன்று சிக்கியிருந்தது. சுமார் 60 கிலோ எடையும், 5 அடி நீளமும் கொண்ட அந்த மீனை மற்ற மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து அந்த கடல் அணில் மீன் வியாபாரி ஒருவர் மூலம் விலைக்கு வாங்கப்பட்டு ராமேசுவரத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது.

இது பற்றி பாம்பன் மீனவர் பேட்ரிக் கூறியதாவது:–

கடல் அணில் மீனானது கடலின் அடியில் மிகவும் ஆழமான பகுதியில் வசிக்கக் கூடியது. கடலில் அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது. கடல் அணில் மீன் இதுவரையிலும் 10 கிலோ எடை வரையில் தான் வலையில் சிக்கியுள்ளது. ஆனால் 60 கிலோ எடையில் பெரிய கடல் அணில் மீன் வலையில் சிக்கியது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்