நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டியின்போது கூறினார்.
பரமக்குடி,
பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நபுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜிஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் மேலிட பார்வையாளர்கள் சஞ்சய்தத், அருள் தத்தையா, முருகன், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகி முத்துராமலிங்கம், தொழிற்சங்க தலைவர் ஹாரிஸ், சிறப்பு பேச்சாளர் வீரபத்திரன், வட்டார தலைவர்கள் ஜோதிபாலன், சேதுபாண்டி, முனீசுவரன், மாவட்ட பொது செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். போகலூர் வட்டார தலைவர் முனீசுவரன் நன்றி கூறினார்.
பின்னர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு அளித்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் சேர்ந்தால் 100-ல் 2 பேருக்கு கண்டிப்பாக தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்.
அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 20,000-ம் உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி. வரியை நீக்கினால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கூற வேண்டும். இந்த வரியால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். நடிகர்கள் போராடுவதை போல் அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.