தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதா: தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபையை கூட்டி ஒப்புதல் பெறுவோம்
தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபையை கூட்டி ஒப்புதல் பெறுவோம் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபையை கூட்டி ஒப்புதல் பெறுவோம் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
சட்ட மசோதாகர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த ஒரு சட்ட மசோதாவை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த மசோதா சட்டசபையின் கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜண்ணா எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டு குழு அமைத்து சபாநாயகர் கே.பி.கோலிவாட் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சட்டசபை கூட்டு குழுவின் முதல் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மக்களின் நலன் முக்கியம்பொது மக்களின் நலன் கருதி இந்த மசோதாவை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். எங்களுக்கு மக்களின் நலன் முக்கியம். தேவைப்பட்டால் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவோம். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படும் அநீதியை தடுக்கவே இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.
இதுதொடர்பாக சபாநாயகர் அமைத்துள்ள கூட்டு குழுவின் கூட்டம் இன்று(அதாவது, நேற்று) நடைபெற்றது. 5 வார காலத்தில் இந்த குழு தனது அறிக்கையை தயாரிக்கும். கொசுக்களின் தொல்லை அதிகரித்து உள்ளதால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா காய்ச்சல்கள் அதிகளவில் பரவியுள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை...தேவையான அளவுக்கு ரத்தம், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். டெங்கு காய்ச்சலை மேலும் பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.