தணிக்கையில் முறைகேடு: மாநகராட்சி தணிக்கையாளர் மீது விசாரணைக்கு உத்தரவு கமிஷனர் நடவடிக்கை
தணிக்கையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாநகராட்சி தணிக்கையாளர் மீது விசாரணை நடத்த கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டார்.
மும்பை,
தணிக்கையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாநகராட்சி தணிக்கையாளர் மீது விசாரணை நடத்த கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டார்.
தணிக்கையில் முறைகேடுமும்பை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் சாக்கடை தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாலை சீரமைப்பு மற்றும் சாக்கடை தூர்வாரும் பணிகளை தணிக்கை செய்வதற்காக மாநில அரசு சார்பில் சுரேஷ் பன்சோடே என்பவர் மாநகராட்சியின் தலைமை தணிக்கையாளராக நேரடியாக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அவர் தணிக்கை பணிகளில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணைக்கு உத்தரவுமேலும் கொலபா கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திட்டம் தொடர்பான கோப்புகளை தனியார் இரண்டு பேரை மாநகராட்சி ஊழியர்கள் போல் மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து வாங்கி வர செய்ததாகவும், அந்த கோப்புகளை தனியாக படம் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி தணிக்கையாளர் சுரேஷ் பன்சோடே மீது கமிஷனர் ஆஜாய் மேத்தா விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவரை அரசு பணிக்கு திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர் அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் சுரேஷ் பன்சோடே மீதான விசாரணை அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கமிஷனர் அஜாய் மேத்தா கூறினார்.