விவசாயிகளுக்கு எதிராக பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது சுதாகர்ரெட்டி பேச்சு

விவசாயிகளுக்கு எதிராக பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

Update: 2017-07-05 23:00 GMT

திருச்சி,

‘“இந்தியாவை மீட்போம், தமிழகம் காப்போம்“ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நீலகிரி,கிருஷ்ணகிரி, கடலூர், திருவாரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் பிரசாரம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றுப்பேசினார்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அகில இந்திய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயிகள் டெல்லியில் 42 நாட்களாக போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் குறைகள் பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. விவசாயிகளுக்கு எதிராக பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது. வருமான வரித்துறை மூலம் அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் பாரதீய ஜனதா கட்சி கொண்டு வந்து உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய அரசு பல்லக்கு தூக்குகிறது. விவசாய தொழிலாளர்களை பாரதீய ஜனதா நசுக்குகிறது.

இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்