நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி புதுவை சட்டசபை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கம்பன் கலையரங்கில் இருந்து போராட்டக் குழுவினர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு கன்வீனர்கள் ஆனந்தகணபதி, கண்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகே வந்தபோது பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கேயே நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.