அடுத்தடுத்து கடைகள்-மருத்துவமனையில் பூட்டை உடைத்து ரூ.29 ஆயிரம் திருட்டு
பெரம்பலூரில் அடுத் தடுத்து கடைகள், மருத் துவமனையில் பூட்டை உடைத்து ரூ.29 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கால்நடை மருத்துவமனையின் பின் புறத்தில் ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தின் தரைதளத்தில் ஜெராக்ஸ் கடை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய கம்மல், வளையல், கவரிங் செயின், கண்மை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் பேன்சி ஸ்டோர் இருக்கிறது.
மேலும் இந்த பேன்சி ஸ்டோரில் சோப்பு, எண்ணெய் பாட்டில் உள்பட பிற அத்தியாவசிய பொருட் களும், சாக்லெட்-பிஸ்கட் உள்பட மிட்டாய்களும் விற்பனை செய்யப்படுகிறது. அழகு சாதன பொருட்கள், உடல் ஆரோக்கியத்திற்கான துணை உணவுகள் உள்பட தனியார் நிறுவனத்தின் உடல்நலம் சார்ந்த தயாரிப்பு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பேன்சி ஸ்டோரை பெரம்பலூர் ரெங்கம்மாள் நகரை சேர்ந்த காதர் பாஷா (வயது 55) நடத்தி வருகிறார். பெரம்பலூர் மதர்சா ரோடு 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ஆர்.சுதாகர் (34) அந்த ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார்.
மேலும் அந்த பேன்சி ஸ்டோரை ஒட்டியவாறே தனியார் தோல்நோய் மருத்துவமனை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கடைகளை அடைத்து விட்டு அதன் உரிமையாளர்கள் தங்களது வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் வணிக வளாக கட்டிடத்தில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் டி.சுதாகர் அவ்வழியாக நேற்று காலை சென்றார். அப்போது மருத்துவமனையின் ஷட்டரில் பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இரவு பூட்டு போட மறந்து விட்டு மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் சென்று விட்டார்களா? என்கிற சந்தேகத்துடனேயே டாக்டர் சுதாகர் மருத்துவ மனை ஷட்டரை திறந்து பார்த்தார். அப்போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மேஜையில் வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து வெளியே வந்து அவர் பார்த்த போது பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் பூட்டுகளும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பக்கத்து கடைக்காரர்களுக்கு டாக்டர் சுதாகர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் அலறி அடித்து கொண்டு வந்து பார்த்தனர். அப்போது ஜெராக்ஸ் கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சில்லறை காசுகள் மேஜை மீது சிதறி கிடந்தன.
பேன்சி ஸ்டோரை திறந்து பார்த்த போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தில் சீட்டு பணம் கட்டுவதற்காக பணத்தை வைத் திருந்ததாக காதர் பாஷா தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வணிக வளாக கட்டிடத்தின் எதிரே அஸ்திவாரத்திற்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் கடையின் பூட்டுகள் கிடந்தது தெரிய வந்தது. மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஜெராக்ஸ் கடை, பேன்சி ஸ்டோர், மருத்துவ மனையில் கைவரிசை காட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.