ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து மோசடி செய்த பட்டதாரி கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து மோசடி செய்த பட்டதாரி கைது;
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படி நடந்து வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சுந்தரராஜன் (வயது25) என்றும், பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது மேலூர் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற முன்னாள் ராணுவ வீரரான இளவரசன், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வந்த போது கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ.31 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு ஓடி விட்டது தெரிய வந்தது. இதே போன்று கோடங்குடி கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் சரோஜாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி பேலன்ஸ் பார்த்து தருவதாக கூறி வேறு கார்டை அவரிடம் கொடுத்து விட்டு அவரது கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரத்து 520-ஐ எடுத்து விட்டார். இதே போன்று தேவாமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடமும் ஏ.டி.எம். கார்டை மாற்றி அவரது கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரத்து 500-ஐ மோசடி செய்து விட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுந்தரராஜனை கைது செய்தனர். கைதான சுந்தரராஜன் பி.ஏ. பட்டதாரி ஆவார்.