இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த காதலன் கைது
பண்ருட்டி அருகே இளம் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானஞ்சாவடி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் கடந்த 1-ந்தேதி காலை தீக்காயங்களுடன் சுமார் 20 வயதுடைய இளம்பெண் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
தீக்காயமடைந்ததால், இளம் பெண் சுயநினைவு இல்லாமல் இருந்தார். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் தெரிவித்த தகவல் முரண்பாடாக இருந்தது. எனவே இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை உடனடியாக போலீசாரால் தெரிந்து கொண்டு, விசாரணையை துரிதப்படுத்த முடியாமல் இருந்தது.
இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த இளம்பெண் நேற்று முன்தினம் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன்பின்னர் போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவர் சென்னை எஸ்.கொளத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் என்பதும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம் பெண்ணுக்கு முகநூல்(பேஸ்புக்) மூலமாக சேலத்தை சேர்ந்த முரளி என்கிற நாராயணன்(28) என்பவர் அறிமுகமானார். முரளி தனது பேச்சால் இளம் பெண்ணை மயக்கினார். இதனால் அவர் பேசிய அனைத்தையும் உண்மை என நம்பிய இளம்பெண் அவரை காதலிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி தாம்பரத்திற்கு காரில் சென்ற முரளி, இளம் பெண்ணை அங்கிருந்து தன்னுடன் அழைத்து சென்றார். இந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள முந்திரிதோப்பில் வைத்து அவரை உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்று இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே இளம் பெண்ணின் தந்தை மகள் மாயமானது குறித்து மதுராந்தகம் போலீசில் புகார் செய்து இருந்தார். நடந்த சம்பவம் பற்றி அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர், கடலூர் வந்து, அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவான முரளியை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், முருகேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார், இளம்பெண் கூறிய தகவலின் அடிப்படையில் முரளியின் செல்போன் எண் மூலமாக அவரை பின்தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கிராமத்தில் முரளி பதுங்கி இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்று, நேற்று அதிகாலை கிருஷ்ணகிரியில் உள்ள குட்டைக்கொல்லை என்கிற கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர்.
தொடர்ந்து கைதான முரளியை பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இளம் பெண்ணை கடத்தி செல்ல முரளி பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முரளியிடம் விசாரித்ததில், அவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி குட்டைகொல்லை கிராமமாகும். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சிவசக்தி(24) என்கிற மனைவி உள்ளார். 1 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. முரளி அதே பகுதியில் செல்போன் கடை, பேக்கரி ஆகியவற்றை வைத்து நடத்தி வருகிறார். சொந்தமாக கார் ஒன்றையும் வைத்து உள்ளார். தனக்கு திருமணமானதை மறைத்தும், தன்னை பற்றி பொய்யான தகவல்களை கூறியும் இளம் பெண்ணை மயக்கி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.