மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஒருவர் பலி

மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஒருவர் பலியானார்.

Update: 2017-07-05 21:45 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். மறைமலைநகர் அருகே செல்லும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் குப்புசாமி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் குப்புசாமியை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்