கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் 500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

Update: 2017-07-05 22:00 GMT

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் 500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 100 பேர் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் வால்பாறை அமீது (அ.தி.மு.க.), சவுந்தரபாண்டியன் (தி.மு.க.), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.), அருணகிரி (இந்திரா தோட்ட தொழிலாளர் சங்கம்) மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நேற்று இரவு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனுவில் ‘ஹைபாரஸ் எஸ்டேட்டில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, ஆஸ்பத்திரி வசதி உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே அவற்றை உடனடியாக செய்து தர வேணடும்’ என்று கூறியிருந்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்