ரேஷன் கடைகளில் ‘ஸ்மார்ட்’ கார்டில் புகைப்படம் சேர்க்க சிறப்பு ஏற்பாடு
ரேஷன் கடைகளில், ‘ஸ்மார்ட்’ கார்டில் புகைப்படம் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
ரேஷன் கடைகளில், ‘ஸ்மார்ட்’ கார்டில் புகைப்படம் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வேலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு 1.4.2017 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆதார் விவரங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து ரேஷன் கார்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது. புகைப்படம் எடுக்க இயலாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடுவது தாமதமாகிறது. எனவே புகைப்படம் விடுபட்டுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது பொருட்களை பெற்றுவரும் அந்தந்த ரேஷன் கடையில் உள்ளது.இவ்வாறு விடுபட்ட புகைப்படங்களை ரேஷன் கடைகளில் ஒப்படைத்திட சிறப்பு ஏற்பாடாக வருகிற 7–ந்தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே இதுவரை ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரப்பெறாத ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது பொருட்களை பெற்றுவரும் ரேஷன் கடையின் விற்பனையாளரிடம் சென்று கார்டுக்கான குடும்ப தலைவரின் புகைப்படத்தினை கொடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், புகைப்படம் இல்லாத குடும்ப தலைவர் ரேஷன் கடையை அனுகும்போது நேரடியாக கைப்பேசியில் புகைப்படம் எடுத்திடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுபட்ட புகைப்படத்தினை விற்பனையாளர்களிடம் ஒப்படைக்கலாம். ரேஷன் கடைக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசின் சேவை மையங்களில் இவ்விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்மார்ட் போன், மடிக்கணினி அல்லது கம்ப்யூட்டர் வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் என்ற இணையதளத்தில் தாமாகவே பதிவேற்றம் செய்து கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. tnpds.comஎனவே இந்தச் சிறப்பு ஏற்பாட்டினை ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரப்பெறாத ரேஷன் கார்டுதாரர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு குடும்ப தலைவரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.