குதிரையை குஷிப்படுத்த...

நம்மைப் போலவே அசதியாக இருக்கும் குதிரைகளை சந்தோஷப்படுத்த வந்துள்ளது ‘ஹார்ஸ்காம்’ ஹெட்செட் கருவி.

Update: 2017-07-05 14:30 GMT
“இசை நம்மைப்போலவே விலங்குகளையும் சாந்தப்படுத்தக்கூடியது. குதிரையின் தன்மைகளை ஆராய்ந்து அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஹெட்செட்” என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

இதனுடன் இணைப்பாக உள்ள மற்றொரு ஹெட்செட்டை குதிரைப் பயணியும் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் குதிரைகளுக்கு கட்டளை கொடுத்தால் நேரடியாக அவற்றின் காதுகளுக்குள் ஒலிப்பதால் குதிரை துரிதமாக செயல்படும். மேலும் குதிரை சவாரியின்போது போன் அழைப்புகளை ஏற்று பேசவும் இந்த கருவி உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்