விமானத்தை முந்தும் ஹெலிகாப்டர்
பிரான்சின் பாரீஸ் நகரில் சமீபத்தில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது அதிவேக ஹெலிகாப்டர்.
‘யூரோகாப்டர் எக்ஸ்3’ எனப்படும் இந்த ஹெலிகாப்டர், கூடுதல் இறக்கைகளுடன் விமானம் போல மேலெழும்பும் திறனும், அதிவேகத்தில் பறக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ஹெலிகாப்டர் விரைவில் விமானங்களுக்கு மாற்றான ஆகாய சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிகிறது. 2019-ம் ஆண்டிற்குள் துரித ஹெலிகாப்டர் சேவையை தொடங்க இருக்கிறது பிரான்ஸ்.