பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம்,
சேலம் - ஏற்காடு மெயின் ரோட்டில் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்க கோரியும் சத்யாநகர் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எவ்வித நிபந்தனையும் இன்றி சீராக குடிநீர் வழங்கிட வேண்டும், என்று கோஷம் எழுப்பினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.