தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்

தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்

Update: 2017-07-04 22:30 GMT
திருச்சி,

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு வாரத்தையொட்டி திருச்சியில் நேற்று தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் கே.ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மண்டல வேலை வாய்ப்பு துறை இணை இயக்குனர் அனிதா, துணை இயக்குனர் மகாலெட்சுமி, உதவி இயக்குனர் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு வாரத்தையொட்டி இன்று(புதன் கிழமை) திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு போட்டி தேர்வுகள் மற்றும் உயர் கல்வி பற்றி உரையாற்ற உள்ளனர். 

மேலும் செய்திகள்