பெருந்துறையில் போக்குவரத்து அதிகாரியை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் தர்ணா
பெருந்துறையில் போக்குவரத்து அதிகாரியை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் தர்ணா பணி செய்யவிடாமல் தடுத்ததாக அதிகாரி போலீசில் புகார்
பெருந்துறை,
பெருந்துறையில் போக்குவரத்து அதிகாரியை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பணி செய்யவிடாமல் தடுத்ததாக அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு போக்குவரத்து பறக்கும்படை அதிகாரி பாண்டியன் பெருந்துறை சிப்காட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த 7 லாரிகளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்பட்டு இருந்ததால் 7 லாரிகளுக்கும் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.