கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-04 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ– மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகையை பெற முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, அவர்களுடைய பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.

இந்த கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள், தங்களின் வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

விவரங்களுக்கு...

இணையதளத்தில் இருந்தும் இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்களை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்