தஞ்சையில் 2–வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2–வது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-07-04 22:45 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2–வது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நடராஜன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஊதிய மாற்றத்தை 1–1–2017 முதல் வழங்க வேண்டும். ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். 15 சதவீதம் ஊதிய நிர்ணயம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் கிள்ளிவளவன், லைலாபானு, முருகையன், பெரோஸ், குணசேகரன், பழனியப்பன், கோபாலகிருஷ்ணன், கலைச்செல்வன், இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். உண்ணாவிரத போராட்டத்தை பாலமுருகன் முடித்து வைத்தார். முடிவில் சேகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்