உடைந்த கண்ணாடியால் கார் டிரைவரை குத்திக்கொல்ல முயற்சி வாலிபர் கைது

உடைந்த கண்ணாடியால் கார் டிரைவரை குத்திக்கொல்ல முயற்சி வாலிபர் கைது

Update: 2017-07-04 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பாறையடி கணியாகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36), கார் டிரைவர். இவருடைய மனைவி அனுசுயா (28). கணவன்–மனைவி இருவரும் நேற்று குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றனர். அதே கடைக்கு பார்வதிபுரத்தை சேர்ந்த வினில் நேசகன்சன் (32) என்பவரும் வந்தார். அப்போது திடீரென அவர், விஜயகுமரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அதோடு தகாத வார்த்தைகள் பேசியபடி கடையில் இருந்த பீரோவின் கண்ணாடியை உடைத்தார். பின் உடைந்த கண்ணாடியை எடுத்து விஜயகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் விஜயகுமார் கீழே விழுந்தார். இதைப் பார்த்து அனுசுயா அதிர்ச்சியடைந்தார். பின்னர் படுகாயம் அடைந்த விஜகுமாரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ர்தனர்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் அனுசுயா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினில் நேசகன்சனை கைது செய்தனர். உடைந்த கண்ணாடியால் டிரைவரை குத்திக்கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்