உடலில் ஒட்டி தீங்கு விளைவிக்கும் ஜெல்லி மீன்கள் கிர்காவ் கடற்கரை செல்பவர்களே உஷார்
மனிதர்கள் உடலில் ஒட்டிக் கொண்டு தீங்கு விளைவிக்கும் ஜெல்லி மீன்கள் கிர்காவ் கடற்கரையில் தென்படுகின்றன.;
மும்பை,
மும்பையில் பருவமழைக்காலத்தில் ஆழ்கடலில் உள்ள ஜெல்லி மற்றும் ஸ்டிங்ரே மீன்கள் கரை ஒதுங்குவது வழக்கம்.
இந்த வகை மீன்கள் மனிதர்களின் உடலில் ஒட்டிக்கொண்டு தீங்கு விளைவிக்கும். இதனால் கடுமையான உடல் அரிப்பு மற்றும் வீக்கம் உண்டாகி தாங்க முடியாத வலி ஏற்படும். கடந்த 2013-ம் ஆண்டு கிர்காவ் கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் ஒதுங்கின.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது கடலுக்குள் இறங்கியவர்களை ஜெல்லி மீன்கள் தாக்கின. இதில் 50-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
எச்சரிக்கை
தற்போது மும்பையில் பருவமழை பெய்து வரும் நிலையில், ப்ளூ பாட்டல் என்கிற ஜெல்லி மீன்கள் கிர்காவ் கடற்கரையில் தென்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக இதுவரையிலும் ஜெல்லி மீன் தாக்கு தலுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை. அதிகளவில் சுற்றுலா பயணிகள் கிர்காவ் கடற்கரைக்கு வருகிறார்கள்.
இருப்பினும் கடற்கரையில் பணியில் இருக்கும் உயிர்காக்கும் வீரர்கள் ஜெல்லி மீன்கள் ஆபத்தானவை என கூறி, யாரும் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.
தாதர் சிவாஜி பார்க், ஜூகு, அக்ஷா கடற்கரை பகுதிகளில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் இதுவரையிலும் தென்படவில்லை.