மதுக்கடையால் தொல்லை: முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், பொதுமக்கள் மனு
புதுவை சட்டசபைக்கு, மதகடிப்பட்டு கோகுலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபைக்கு, மதகடிப்பட்டு கோகுலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வந்தனர். அவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் மதகடிப்பட்டு கோகுலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த சில மாதங்கள் முன்பு எங்கள் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்கு மதுகுடிக்க வருபவர்களால் நள்ளிரவு 12 மணி வரை ஏராளமான தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறோம். அதேபோல் குடிக்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே கோகுலம் நகர் வழியாக குடிமகன்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.