கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கிராமம் நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் போஜன். இவருடைய மகன் தினேஷ் குமார் (வயது 29). கோடநாடு எஸ்ே-்டட் அலுவலகத்தில் கணினி ஊழியராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கண்களில் சற்று பிரச்சினை இருந்த காரணத்தால் 20 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்து இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் வேலைக்கு செல்ல திட்டமிட்டு எஸ்டேட்டிற்கு பணிக்கு சென்றுள்ளார். கண்கள் மங்கலாக தெரிவதால் பணி செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் வீட்டில் இருந்தவர்கள், உறவினர் ஒருவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றதை அறிந்து, யாருமில்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
இதற்கிடையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் தினேஷ்குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து தினேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவரது தந்தை போஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து சோலூர்மட்டம் போலீசார் தினேஷ்குமாரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.