கோவில்பட்டியில் அனைத்துக்கட்சி கூட்டம்
கோவில்பட்டியில் அனைத்துக்கட்சி கூட்டம்;
கோவில்பட்டி,
தீப்பெட்டி தொழில் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. எனும் சரக்கு, சேவை வரிவிதிப்பை கண்டித்து கோவில்பட்டி நகர தி.மு.க. அலுவலகத்தில் அனைத்துக்கட்சி சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் பரமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து தீப்பெட்டி தொழிற்சங்கம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) பேரணி நடத்துவது, நாளை (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது, வருகிற 9–ந்தேதி காலை 10 மணிக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.