முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை 8,067 பேர் எழுதினர் 522 பேர் வரவில்லை
அரியலூர் மாவட்டங்களில் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை 8,067 பேர் எழுதினர். 522 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர்,
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. மொத்தம் 4,718 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 4,477 பேர் எழுத்து தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 241 பேர் தேர்வுக்கு வரவில்லை.
13 பறக்கும் படைகள்
இத்தேர்விற்கான பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு ஒருவர் வீதம் தலா ஒவ்வொரு பிரிவிலும் 13 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 9 பேர் பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள் ஆவர். இவர்கள் தேர்வெழுதுவதற்கு உதவியாக 10 பேர் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் இரண்டு அலுவலர்கள் வீதம் 26 பேர் அடங்கிய 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினர் தேர்வு மையத்தை சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வு மையங்களில் போதிய வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூரில்...
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. மொத்தம் 3,871 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 3,590 பேர் எழுத்து தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 281 பேர் தேர்வுக்கு வரவில்லை.
இத்தேர்விற்கான பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு ஒருவர் வீதம் தலா ஒவ்வொரு பிரிவிலும் 11 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6 பேர் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் ஆவர். இவர்கள் தேர்வெழுதுவதற்கு உதவியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
8,067 பேர் தேர்வு எழுதினர்
மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் இரண்டு அலுவலர்கள் வீதம் 22 பேர் அடங்கிய 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. மேலும், அறை கண்காணிப்பாளர், காவல் துறையினர், அலுவலக உதவியாளர்கள், நீரளிப்பவர், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 363 பேர் தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஒளி, கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை மொத்தம் 8,067 பேர் எழுதினர். இதில் 522 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.