ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து 2 மகன்களுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து 2 மகன்களுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பென்னாகரம்,
விடுமுறை நாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். காலை 9 மணி அளவில் இளம்பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள நாகர்கோவில் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் 2 குழந்தைகளுடன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜானகிராமன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள புதுகரம்பு பகுதியை சேர்ந்த நீலா (வயது 25) என்பதும், குழந்தைகள் அவருடைய மகன்கள் கோகுலகண்ணன்(8), மோகன்ராஜ்(7) என்பதும், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது.
வாழ்க்கையில் விரக்தி
மேலும் இளம்பெண் நீலாவின் கணவர் செந்திலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மகன்களை பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கூறி வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நீலா, தனது 2 மகன்களுடன் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் அவர்கள் 3 பேரையும் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண் நீலாவிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் கணவர் செந்தில் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்து கொண்டு ஒகேனக்கல்லுக்கு வந்தனர். போலீசார் செந்தில் மற்றும் நீலாவுக்கு அறிவுரை கூறினர். பின்னர் கணவர் மற்றும் உறவினர்களிடம் நீலா மற்றும் 2 குழந்தைகளையும் போலீசார் ஒப்படைத்தனர். 2 மகன்களுடன் இளம்பெண் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.