முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 2 ஆயிரத்து 108 ஆண்களும், 4 ஆயிரத்து 17 பெண்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 125 பேர் எழுதினார்கள். 19 பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்பட 76 மாற்றுத்திறனாளிகளும் இந்த தேர்வை எழுதினார்கள்.
காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.