மெட்ரோ ரெயில் பணியின் போது விபத்து: வட மாநில வாலிபர் சாவு

சென்னையில் தற்போது நேரு பூங்காவில் இருந்து சென்டிரல் வரையும், சைதாப்பேட்டை முதல் வண்ணாரப்பேட்டை வரையும் மெட்ரோ ரெயிலுக்காக சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-07-02 22:45 GMT
சென்னை,

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் (ரிப்பன் மாளிகை) அருகே நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பலியான வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அமரேந்திரர் ராம் (வயது 32) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்