சதுப்பேரி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
போளூர் தாலுகா சதுப்பேரி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. தாசில்தார் தே.புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
போளூர்,
போளூர் தாலுகா சதுப்பேரி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. தாசில்தார் தே.புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் ப.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கோமதி வரவேற்றார். முகாமில் சிறப்புஅழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சாந்தி கலந்துகொண்டு, 274 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மண்டல துணை தாசில்தார்கள் சோ.வைதேகி, எ.ஆர்.முகமதுஅலி ஜின்னா மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி நன்றி கூறினார்.