மதுக்கடையை மூடக்கோரி ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் திடீர் போராட்டம்
சேலம் அருகே மதுக்கடையை மூடக்கோரி ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். மேலும், கிணற்றில் இறங்கி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்,
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. இதையடுத்து இந்த கடையை வேறு இடத்தில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் இடம் தேடி வந்தனர்.
இதற்கிடையில், வெள்ளாளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடையில் கொல்லப்பட்டி ஊராட்சி பொரசமரத்துக்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் மதுக்கடை அமைக்க இடம் கொடுத்தார். இதையடுத்து அங்கு மதுக்கடைக்கு என ஒரு அறை கட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் அங்கு மதுக்கடையும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மதுக்கடை வழக்கம்போல் திறக்கப்பட்டது. இதை அறிந்த வெள்ளாளப்பட்டி பொரசமரத்துக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்த மதுக்கடையின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர். இந்த பகுதியில் மதுக்கடை செயல்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே மதுக்கடையை உடனடியாக மூடவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் கையில் கிடைத்த கற்களை எடுத்து கடையின் மீது வீசினார்கள். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மேற்கு சரக உதவி போலீஸ் கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ் (பள்ளப்பட்டி), செந்தில்குமார் (சூரமங்கலம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகவேல் என்பவருடைய மனைவி சகுந்தலா அங்கு இருந்த ஒரு கிணற்றில் இறங்கி, இங்கு மதுக்கடை செயல்பட்டால் நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அங்கு இருந்து கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி, அருகில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் நின்றபடியும், அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்ததால் தண்டவாள பகுதியில் இருந்து வெளியேறி விட்டனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன் வந்தார். அவரும், போலீசாரும் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் தரப்பில், மதுக்கடை திறக்கப்பட்டது அரசின் உத்தரவு. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தற்காலிகமாக 10 நாட்கள் இந்த பகுதியில் கடை இருக்கும். பிறகு நாங்கள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் இதை ஏற்கவில்லை. கடையை இந்த இடத்தில் இருந்து அகற்றினால்தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை நாங்கள் இந்த இடத்தில்தான் இருப்போம். எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மதுக்கடையால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்கிறோம். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மதுக்கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைப்போம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாலை 6 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.