மணல் லாரி, பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

மணல் லாரி, பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

Update: 2017-07-01 22:30 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணலை எடுத்து வந்து அதே பகுதியில் குவித்து வைத்து லாரிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தவுட்டுப்பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் அள்ள தயார் நிலையில் இருந்தனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் விரைந்து சென்று அந்த லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர். லாரி டிரைவர், பொக்லைன் டிரைவர் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர். மணல் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்