எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2017-07-01 22:30 GMT
கரூர்,

கரூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சரக்கு, சேவை வரியை நீக்க வேண்டும், பாலிசி கடன் வட்டியை குறைத்திட வேண்டும், பாலிசி போனசை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிளை செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் தங்கவேல் உள்பட எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்