2 கிராமங்களில் மர்ம காய்ச்சலால் 15 குழந்தைகள் பாதிப்பு
காரிமங்கலம் அருகே 2 கிராமங்களில் மர்ம காய்ச்சலால் 15 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி, கோவிலூர் ஊராட்சிகளுக்குட்பட்ட காமராஜர் நகர், பூனத்தனஅள்ளி கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்காமல் இருந்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தூர்வாராத சாக்கடை கால்வாயில் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன. மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
இந்தநிலையில் காமராஜர் நகர் மற்றும் பூனத்தனஅள்ளி ஆகிய 2 கிராமங்களிலும் 14 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் கடந்த சில நாட்களாக பாதிப்புக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் நேற்று அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
பரிந்துரை
மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய்களில் கொசுமருந்து தெளிக்கவும், புகைமருந்து அடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். காய்ச்சல் அதிகமாக உள்ள குழந்தைகளை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர். மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் வழங்கினர்.