கிருஷ்ணகிரி,
மத்திய அரசு ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான சேவை வரியை பாலிசிதாரர்களிடம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இதை ரத்து செய்ய கோரி அகில இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்.ஐ.சி.) முகவர்கள் சார்பில் கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. கிளை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முகவர்கள் சிவலோகம், முனுசாமி, சென்றாயப்பன், சத்தியமூர்த்தி, சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.