ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-01 21:30 GMT

பண்ருட்டி,

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பண்ருட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பண்ருட்டி அனைத்து வியாபார சங்கங்களின் செயலாளர் மோகனகிருஷ்ணன், மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயமூர்த்தி, செயலாளர்கள் சேகர், தணிகாசலம், ராமமூர்த்தி, ரஜினி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்