அமெரிக்க அதிபரின் காதல் சேட்டை

நான் என் காதலருடன் அமர்ந்திருந்தேன். பின்னால் இருந்து ஒருவர் என் மீது கோர்ட்டை தூக்கிப் போட்டார். திரும்பிப் பார்த்தால் அங்கு டிரம்ப் அமர்ந்திருந்தார்.

Update: 2017-07-01 09:51 GMT
‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், என்னை வம்புக்கு இழுத்தார்’ என்று கூறி பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சல்மா, தன்னிடம் டிரம்ப் செய்த சேட்டைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார்.

“காதலர் நிகழ்ச்சி ஒன்றில் நான் என் அப்போதைய காதலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது பின்னால் இருந்து ஒருவர் என் மீது கோர்ட்டை தூக்கிப் போட்டார். திரும்பிப் பார்த்தால் அங்கு டிரம்ப் அமர்ந்திருந்தார். என் காதலரோ, டிரம்பை பார்த்து ‘ஹலோ’ சொன்னார்.

உடனே டிரம்ப், ‘சாரி உங்கள் காதலியா? குளிரால் நடுங்கினார். அதனால் தான் என்னுடைய கோர்ட்டை அவர் மீது போர்த்தினேன்’ என்று சமாளித்தார்.

பின்னர் அன்றிரவு டின்னருக்கு என்னையும், என் காதலரையும் அழைத்திருந்தார் டிரம்ப். டின்னரின்போது அவர் என் காதலருடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் இருவரின் செல்போன் எண் களையும் கேட்டு வாங்கிக் கொண்டார். அதன் பிறகு டிரம்ப், என்னுடைய காதலருடன் பேசவே இல்லை.

எனக்கு போன் செய்து டேட்டிங் வருமாறு கூப்பிட்டார்.

நான் ‘எனக்கு காதலர் இருக்கிறார்’ என்றேன். அதற்கு அவர், ‘உங்கள் காதலர் பெரிய ஆளே இல்லை. நீங்கள் என்னுடன் தான் வெளியே செல்ல வேண்டும்’ என்று செல்லமாக கட்டளையிட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்” என்று சல்மா தெரிவித்துள்ளார்.

‘ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக், குள்ளமாக இருப்பதால் அவரை நான் நிராகரித்தேன்’ என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், சல்மாவின் இந்தப் பேட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 

மேலும் செய்திகள்