அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டம்

பொன்னேரி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டம்

Update: 2017-06-30 21:45 GMT

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் 64 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள், பட்டா வழங்க வேண்டும் என்று கூறி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னேரி ரெயில் நிலைய சாலை குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கு தங்க வைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்