கட்சி கொடிகம்பங்கள் சேதம்: சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
கொரடாச்சேரியில் கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்,
கொரடாச்சேரி வெட்டாற்று பாலம், பாலாகுடி, மஞ்சகொல்லை ஆகிய 3 இடங்களில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய 2 கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இந்த கொடி கம்பங்களை கடந்த 23-ந் தேதி இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். தகவல் அறிந்த கட்சியினர் நேற்று முன்தினம் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் புகழேந்தி, நகர செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் கணேசபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், நில உரிமை மீட்பு அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன் உள்பட 2 கட்சிகளை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.