தூத்துக்குடி கடலில் அதிக அளவில் பிடிபடும் சூரை மீன்கள் ஒரு கிலோ ரூ.70–க்கு விற்பனை
தூத்துக்குடி அருகே அதிக அளவில் சூரை மீன்கள் பிடிபட்டு வருகின்றன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே அதிக அளவில் சூரை மீன்கள் பிடிபட்டு வருகின்றன.
சூரை மீன்கள்தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு விசைப்படகுகள் கடந்த 15–ந் தேதி முதல் கடலுக்கு சென்றன. இந்த விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் தங்குகடலில் அதிக அளவில் மீன்களை பிடித்து வருகின்றனர்.
தருவைகுளம் பகுதி கடலில் சூரை, வரிச்சூரை, காக்காசூரை, கிளவாழை போன்ற மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு வருகின்றன. மற்ற மீன்கள் வரத்தும் மிகவும் குறைவாக காணப்படுகிறது. தருவைகுளம் பகுதியில் ஒரு நாளுக்கு சுமார் 10 டன் வரை மீன்கள் பிடிக்கப்படுகிறது. பாறை, சீலா போன்ற மீன்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வலைகளில் சிக்கி வருகின்றன. இது மீனவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
விலை குறைவுகடந்த வாரத்தில் ஒரு கிலோ சூரை மீன் அதிகபட்சமாக ரூ.135 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீன்கள் வரத்து அதிகரித்து இருப்பதால் விலை குறைந்து உள்ளது. இதனால் ஒரு கிலோ சூரை மீன் ரூ.70–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் விலை குறைந்து இருப்பதும் மீனவர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.