தர்மபுரி 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டெடுப்பு

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடுகற்கள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2017-06-16 23:05 GMT

தர்மபுரி,

போரில் இறந்த வீரர்களின் வீரத்தை போற்ற நடுகற்கள் அமைக்கும் பழக்கம் பழங்காலத்தில் இந்த பகுதியில் நிலவியது. இந்த நிலையில் அரூர் அருகே உள்ள கெரகோடஅள்ளி கிராமத்தில் 11–ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த நடுகல் சேதமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கிருஷ்ணன் மற்றும் குழுவினர் கெரகோடஅள்ளியில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தை சேர்ந்த அந்த கல்வெட்டு கி.பி.1032–ம் ஆண்டில் செதுக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நடுகல்லில் அதை அமைத்தவர்கள் யார்? யாருடைய ஆட்சிகாலம் என்ற விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இத்தகைய நடுகற்கள் பாதுகாப்பற்ற நிலையில் சேதமடைவதை தடுக்கவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்