மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு காரில் தப்பி சென்ற பெண்ணுக்கு வலைவீச்சு
கீரனூர் பஸ் நிலையத்தில் மூதாட்டி ஒருவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து காரில் தப்பிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரனூர்,
கீரனூர் அருகே உள்ள நீர்பழனி கிராமத்தை சேர்ந்தவர் பணஞ்சாயி (வயது 65). இவர் நேற்று கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து நீர்பழனிக்கு பஸ்சில் ஏறினார். அப்போது ஒரு பெண் பணஞ்சாயி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். இதனால் மூதாட்டி சத்தம் போட்டார்.
இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த பெண் பஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில், அந்த காரை துரத்தி சென்றனர்.
ஆடுகள், மாடு மீது மோதியது
அப்போது கார் கிள்ளுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே வந்த 2 ஆடுகள் மற்றும் ஒரு மாடு மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. மேலும் எதிரே வந்த வாகனங்களும் கார் வந்த வேகத்தை பார்த்து ஓரம் கட்டின.
மேலும் இளைஞர்கள் 15 கிலோ மீட்டர் தூரம், காரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் தப்பிசென்ற பெண்ணை தேடி வருகின்றனர். பஸ் நிலையத்தில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.