மாட்டு இறைச்சி விவகாரம் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம்

மாட்டு இறைச்சி விவகாரம் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் படையல் போடுவதற்காக கொண்டு வந்த கன்றுக்குட்டியை போலீசார் கைப்பற்றினர்

Update: 2017-06-16 22:15 GMT

மதுரை

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் படையல் போடுவதற்காக கொண்டு வந்த கன்றுக்குட்டியை போலீசார் கைப்பற்றினர்.

‘படையல்‘ போராட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ‘மாட்டை அறுத்து மதுரை வீரனுக்கு படையல் போடும் மக்கள் பண்பாட்டுத்திருவிழா நடைபெறும்‘ என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக் தலைமையில் அந்த பேரவையை சேர்ந்தவர்கள் நேற்று காலை மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கன்றுக்குட்டியுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கன்றுக்குட்டி மீட்பு

போராட்டக்காரர்கள் கொண்டு வந்த கன்றுக்குட்டியை போலீசார் கைப்பற்றி அழைத்துச்சென்றனர்.

பின்பு, புறநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்