கீழமேல்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தில் சாலையோரத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தில் சாலையோரத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையினால் அந்தப் பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக இங்குள்ள இளைஞர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டி அந்த கடையை அகற்ற போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்தக்கடை அங்கிருந்து அகற்றப்பட்டது.
தற்போது அந்தக் கடை மீண்டும் அங்கு திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அந்தக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.