மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.12 லட்சம் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
மோட்டார் சைக்கிளின் சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
ராயபுரம்,
சென்னை பாரிமுனை ஆண்டர்சன் தெருவை சேர்ந்தவர் ஜாவித் மொய்தீன். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழ மொத்த வியாபாரம் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் 10 ஆண்டுகளாக ஆசிப் சுல்தான் (வயது 25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஜாவித் மொய்தீன் கடையில் வசூலான ரூ.12 லட்சத்தை பாரிமுனையில் உள்ள தன்னுடைய தொழில் கூட்டாளியிடம் கொடுக்குமாறு ஆசிப்பிடம் கொடுத்து அனுப்பினார்.
அந்த பணத்தை ஆசிப் மோட்டார் சைக்கிளின் பின்புற சீட்டிற்கு அடியில் வைத்து பூட்டிவிட்டு பாரிமுனை வந்தார். பின்னர் பாரிமுனை 2–வது கடற்கரை சாலையில் உள்ள ரீசார்ஜ் கடையில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார்.
பணம் திருட்டுபின்னர் திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் சீட்டு உடைக்கப்பட்டு அதற்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆசிப் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.
100 லிட்டர் டீசல் பறிமுதல்* பெருங்களத்தூர் அருகே பஸ்சில் சென்ற திருவண்ணாமலை அழகானந்தல் கிராமத்தை சேர்ந்த பூவேந்திரன் (58) என்பவரது பையில் இருந்த 14 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
* சூரப்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்ததாக, புழல் வள்ளுவர் நகரை சேர்ந்த சுரேஷ் (42) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 100 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
* ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த நீலா வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த நாயைக்கொன்று மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். வீட்டில் எதுவும் இல்லாததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
* காதல் விவகாரத்தில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா (19) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுவன் சாவு* சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பாலமுருகன் (29), மன்னார்குடியை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* புழுதிவாக்கம் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராமைய்யா (36) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
* இரும்புலியூர் தமிழ் பூங்கா தெருவில் உள்ள குளத்தில், பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த ரவிசங்கரின் மகன் மணிகண்டன் (10) பிணமாக கிடந்தான்.
ரூ.7 லட்சம் மோசடி* பெரும்பாக்கத்தில் மாநகர பஸ்சில் இருந்து தவறி விழுந்த புதுச்சேரியை சேர்ந்த பாலகுரு (57), பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுதொடர்பாக சேலையூரை சேர்ந்த பஸ் டிரைவர் சேகர் (52) கைது செய்யப்பட்டார்.
* தோழியின் காசோலைகளை திருடி ரூ.7 லட்சம் மோசடி செய்ய முயற்சித்ததாக, ராயப்பேட்டை சந்தாசாகிப் தெருவை சேர்ந்த யாஸ்மின் (29), அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.