போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி லாரி உரிமையாளர் கைது

மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி லாரி உரிமையாளர் கைது

Update: 2017-06-16 21:45 GMT

விழுப்புரம்,

மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சப்–இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி வரப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் நேற்று காலை திருப்பச்சாவடிமேட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை போலீசார் வழிமறித்தனர். ஆனால் லாரியை நிறுத்தாமல் அதனை ஓட்டி வந்த உரிமையாளர், திடீரென சப்–இன்ஸ்பெக்டர் மருதப்பன் மீது லாரியை ஏற்ற முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து சற்று ஒதுங்கிக்கொண்டார்.

கைது

உடனே அந்த லாரியை போலீசார் மடக்கிப்பிடித்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்